ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறுமிகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாழடைந்த கட்டடம் ஒன்றிற்குச் சிறுமிகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அவர்கள் கதறி அழுவதைச் சித்தரிக்கும் இந்த வீடியோ, பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
🚨 आजकल बहन बेटियों कि इज्जत इतनी सस्ती हो गई है कि कोई भी कहीं भी लूट सकता है,,,,,,,,
👉 @PoliceRajasthan @DausaPolice@RajPoliceHelp ये वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा,,,,,,स्थान कन्फर्म नही है,,,,,,,,
👉 कृपया संज्ञान ले और इन दरिंदो को कठोर से कठोर सजा सुनिश्चित करे,,,,,,… pic.twitter.com/05RYksSIII— 🇮🇳 गोम सिंह शेखावत 🇮🇳 (@GomOfficial84) July 17, 2026
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தௌசா காவல் கண்காணிப்பாளர் பியூஷ் தீட்சித், உடனடியாகச் சிறப்புப் படைகளை அமைத்துச் சந்தேகத்திற்குரிய இருவரை அடையாளம் கண்டு, அவர்களைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் பழையது எனக் கூறப்படும் நிலையில், இது ஏன் முன்பே போலீசாருக்குத் தெரியவில்லை என்ற கேள்வியும், வீடியோ எடுத்த நபர் ஏன் சிறுமிகளைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்தார் என்ற கேள்வியும் சமூகத்தில் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தைப் பாதுகாப்பது சட்டப்பூர்வமான கடமையாகும் என்பதால், இதுபோன்ற வீடியோக்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர். மேலும், குற்றவாளிகளைக் கைது செய்து, இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
