தமிழக முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஒரே கனவோடு, உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து தீவிர ரசிகர் ஒருவர் தமிழ்நாட்டை நோக்கி நடைபயணமாகக் கிளம்பியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலத்திலிருந்து ஒரு ரசிகர் முதல்வர் விஜய்க்காக இவ்வளவு பெரிய முடிவை எடுத்திருப்பது இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இவ்வாறு உத்தரப்பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு நடைபயணத்தைத் தொடங்கியுள்ள அந்த ரசிகரின் பெயர் அமன் பேகன் ஆகும். 24 வயதான இந்த இளைஞர், விஜய் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். தான் விஜய்யின் மக்கள் சேவையைப் பார்த்துப் பிடித்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்யின் மக்கள் நலத்திட்டங்களும், அரசியலில் அவர் காட்டி வரும் ஈடுபாடும் தனக்கு ரொம்பப் பிடித்துவிட்டதாகக் கூறியுள்ள அமன் பேகன், அவரை நேரில் பார்த்துப் பேச வேண்டும் என்பதற்காகவே இந்த 2,300 கிலோமீட்டர் தூர நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த ஜூலை 3-ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் இருந்து தனது நீண்ட தூர நடைபயணத்தை அமன் பேகன் ஆரம்பித்துள்ளார்.
வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் தினமும் நடந்து வரும் இவரது திட்டத்தின்படி, இன்னும் 15 நாட்களில் இவர் தமிழ்நாட்டிற்குள் வந்துவிடுவார் எனத் தெரிகிறது. இவரைப் பற்றிய செய்திகளும், தகவல்களும் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி வெளியானது முதலே நெட்டிசன்களும் தங்களது கமெண்ட்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
“இவர்தான் நிஜமான முரட்டு ரசிகர்!” என்றும், “முதலமைச்சர் விஜய் மீது வட மாநில இளைஞருக்கு இவ்வளவு பாசமா?” என்றும் ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் 15 நாட்களில் தமிழ்நாடு வரவிருக்கும் இந்த ரசிகரைத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நேரில் சந்திப்பாரா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
