மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் ஆப் மூலம் புக் செய்யப்படும் ஒரு தனியார் கேபில் மூன்று பெண்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கேப் டிரைவர், வழியில் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரையும் காரில் ஏற்றிக்கொள்ளப் போவதாகவும், அதற்கு அந்தப் பெண்களை கொஞ்சம் ‘அட்ஜஸ்ட்’ செய்து அமருமாறும் கூறியுள்ளார்.
அதற்கு அந்தப் பெண்கள் உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளனர். தாங்கள் முழுப் பணம் கொடுத்து, பாதுகாப்பு மற்றும் தனி உரிமைக்காகவே ஒரு தனி காரை புக் செய்திருப்பதாகக் கூறி ஓட்டுநரின் இந்தச் செயலை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
Three girls were travelling in a cab at night in Pune. Midway, the driver asked them to adjust for his friend.
GIRLS: You should’ve told us before. We would’ve booked another cab. Why should we adjust?
DRIVER: It’s just 1km. I don’t have enough CNG to come back. If you don’t… pic.twitter.com/7qiSJ0RYmT
— Lakshay Mehta (@lakshaymehta08) July 15, 2026
“>
டிரைவர் விடாமல், “அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்றால் வேறு காரைப் புக் செய்து கொள்ளுங்கள்” என்று அந்தப் பெண்களிடம் வாதிட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண்கள், “நாங்கள் இந்த சவாரிக்கு முழுமையாகப் பணம் செலுத்துகிறோம், எனவே முன்பின் தெரியாத ஒரு நபரை எங்களுடன் ஏற்ற அனுமதிக்க முடியாது” என்று மிகத் தைரியமாகத் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தனர்.
பெண்களின் இந்த உறுதியான பதிலைக் கேட்டு கேப் டிரைவர் வாயடைத்துப் போனார். இந்த முழு சம்பவமும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் கேப் டிரைவரின் இந்த பொறுப்பற்ற செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில், ஒரு முன்பின் தெரியாத நபரை காரில் ஏற்றுவது பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பலரும் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில், டிரைவரின் மிரட்டலுக்குப் பயப்படாமல், தங்களின் உரிமைகளுக்காகத் தைரியமாக வாதாடிய அந்தப் பெண்களைப் பாராட்டி, சம்பந்தப்பட்ட கேப் நிறுவனம் மற்றும் காவல்துறை இந்த டிரைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
