நடிகர் விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாகக் காத்திருப்பு பட்டியலில் இருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம், வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

உண்மையில் பொங்கல் பண்டிகைக்கே வெளியாக வேண்டிய இப்படம், சென்சார் தொடர்பான சிக்கல்களால் ரிலீஸ் தள்ளிப்போனது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.

தற்போது அனைத்து தடைகளையும் தகர்த்து படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்ட நிலையில், இதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) முதல் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தி படத்தின் புதிய டிரெய்லரை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் திரையில் தோன்றுவதால், இந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.