ஆண்டுக்கு ₹11 லட்சம் சம்பாதிக்கும் 28 வயது பெண் ஒருவர், தனக்கு கணவராக வருபவர் கண்டிப்பாக ₹1 கோடிக்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால், பிரபல திருமணத் தரகரான ஓந்த்ரிலா கபூர் அந்தப் பெண்ணைத் தனது வாடிக்கையாளர் பட்டியலிலிருந்தே நீக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், அது தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
Woman Earning ₹11 LPA Seeks Husband Making Over ₹1 Crore; Matchmaker Says She Dropped Client: ‘Men Can Smell Greed’ https://t.co/Ee8ga74OzQ
“>
மேலும் தனது முடிவைப் பற்றிப் பேசிய ஓந்த்ரிலா, அந்தப் பெண்ணின் தகுதிக்கும் அவர் கேட்கும் வரனுக்கும் இடையே மிகப்பெரிய பொருளாதார இடைவெளி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஆண்களால் பேராசையை எளிதாக முகர்ந்து கண்டுபிடித்துவிட முடியும்” என்றும், இத்தகைய பேராசை கொண்ட எதிர்பார்ப்புகள் ஒருபோதும் நல்ல திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்காது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த சமூக வலைத்தள நெட்டிசன்களும், “₹11 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர், தன்னைவிட 1,000% அதிகமாகச் சம்பாதிக்கும் வரனை எதிர்பார்ப்பது நியாயமற்றது” என அந்தப் பெண்ணின் பேராசையைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.
