ரஷ்யாவின் துவா குடியரசு பகுதியில் உள்ள ‘அட்லாண்டிஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய வரலாற்றுப் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது, சுமார் 2137 ஆண்டுகள் பழமையான ஒரு இளம் பெண்ணின் கல்லறை மற்றும் அவரது உடலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த பழங்கால உடலைக் கண்டெடுத்த தொழிலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அதன் அருகில் இருந்த ஒரு மர்மமான பொருளைத் திறந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெண்ணின் உடலுக்கு அருகில் பதிக்கப்பட்டிருந்த பெட்டியைத் திறந்தபோது, அதில் நவீன கால ஐபோனை போன்ற வடிவத்தைக் கொண்ட ஒரு பொருள் இருந்தது.
இந்நிலையில் கறுப்பு நிறத்தில் செவ்வக வடிவில் இருந்த அந்தப் பொருளைக் கண்டு ஆரம்பத்தில் அனைவரும் வியப்படைந்தனர். ஆனால், தீவிர ஆய்வுக்குப் பிறகு அது நவீன ஐபோன் அல்ல, மாறாக விலையுயர்ந்த ஜெட் எனப்படும் கருப்பு ரத்தினக் கல்லால் செய்யப்பட்ட ஒரு பழங்கால ஆடை அலங்காரப் பெல்ட் கொக்கி என்பது தெரியவந்தது. அதில் சீன நாணயங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
