ஈரான் – அமெரிக்க மோதலால் மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தியின் தெற்கே ஓமன் கடல் பகுதி வழியே சென்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘மொம்பாசா’ மற்றும் ‘அல் பாஹியா’ ஆகிய 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் திடீரென 2 ஏவுகணைகளை வீசி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கோழைத்தனமான தாக்குதலில், மொம்பாசா கப்பலில் வேலை பார்த்து வந்த இந்திய ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 6 இந்தியர்கள் மற்றும் 2 உக்ரைன் நாட்டினர் உட்பட 8 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

​இந்த விபரீத தாக்குதலால் இரு கப்பல்களும் பலத்த சேதமடைந்துள்ள நிலையில், சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறி செயல்பட்ட ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க தங்களுக்கு முழு உரிமை உள்ளதாக அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளதால், அந்த கடல் பகுதியில் தற்போது அசாதாரணமான போர்ப் பதற்றம் சூழ்ந்துள்ளது.