சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் தண்டவாளத்தில் வந்த புகழ்பெற்ற பொம்மை ரயிலைப் பார்த்து, “தவறான திசையில் ரயிலை ஓட்டி வருகிறாய்” என மஹிந்திரா சுமோ கார் ஓட்டுநர் ஒருவர் லோகோ பைலட்டிடம் வாதாடிய வீடியோ இணையத்தில் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியிலும் சிரிப்பலையிலும் ஆழ்த்தியுள்ளது.
டார்ஜிலிங்கின் மலைப்பாதையில் வழக்கமான பாதையில் வந்து கொண்டிருந்த டாய் டிரைன், அங்கு தண்டவாளத்திற்கு மிக அருகில் முறையற்ற வகையில் பார்க் செய்யப்பட்டிருந்த சுமோ காரின் மீது லேசாக உரசியதை அடுத்து, ஓட்டுநர் காரை விட்டு கீழே இறங்கி ரயிலையே தப்பான ரூட்டில் வருவதாகக் கூறி லோகோ பைலட்டுடன் சண்டையிட்டுள்ளார்.
சுற்றியிருந்த மக்கள் “ரயில் எப்போதும் தண்டவாளத்தில் தான் போகும், அதுதான் அதனுடைய நிலையான வழித்தடம்” என்று எடுத்துச் சொல்லியும் அவர் கேட்காத நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே நிர்வாகமும் உள்ளூர் போலீஸாரும் அந்தச் சுமோ வாகனத்தைப் பறிமுதல் செய்து, ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
View this post on Instagram
“>
இந்த அசாத்திய விபரீத வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் வேளையில், “ரயிலையே தப்பு சொல்லும் அளவுக்கு இந்த டிரைவருக்கு தன்னம்பிக்கை இருக்கிறதே” என்று நெட்டிசன்கள் இதனை பகிரப்பட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
