பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான “வாட்டர் மெலன் ஸ்டார்” திவாகரை சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூப் சேனல் ஒன்றின் ஊழியர், திவாகர் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், தன்னிடம் இருந்து சட்டவிரோதமாக ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணையில் இறங்கிய கீழ்ப்பாக்கம் போலீசார், பிக்பாஸ் திவாகர் மீது 2 கடுமையான பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பிக்பாஸ் பிரபலம் ஒருவர் யூடியூப் ஊழியரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
