மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என்பது பலருக்கும் ஒரு கனவு இலக்காக இருந்தாலும், அதுவே ஒருவரது வாழ்க்கையில் மிகப்பெரிய ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது என்று நிதி குஷ்வாஹா என்ற உள்ளடக்க உருவாக்குநர் கூறிய கருத்து இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருமானம் குறைவாக இருப்பதால் ஆபத்தானது அல்ல, மாறாக இது வாழ்க்கைக்குப் போதுமான வசதிகளைத் தருவதால், மனிதர்கள் தங்கள் லட்சியங்களைக் கைவிட்டு ஒருவிதத் திருப்தி நிலைக்கு வந்துவிடுகிறார்கள் என்று அவர் விளக்குகிறார்.

வாடகை, வார இறுதி உணவுகள், ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா எனத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடுவதால், முன்னேற்றம் மற்றும் புதிய முயற்சிகளுக்கான ஆர்வம் குறைந்து, தனிப்பட்ட வளர்ச்சியில் தேக்கம் ஏற்படுவதாக அவர் வாதிடுகிறார்.

“வசதிதான் ஒருவரது வளர்ச்சியின் மிகப்பெரிய எதிரி” என்று கூறும் இவருடைய கருத்தை பலரும் ஆமோதித்தாலும், ஒரு தரப்பினர் இதற்கு மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது பணம் சம்பாதிப்பதில் மட்டுமே இல்லை என்றும், வாழ்க்கையின் தரம் மற்றும் மன அமைதியிலும் இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட சம்பளத் தொகை ஆபத்தானது என்பதை விட, ஒருவரது மனநிலை தான் முக்கியம் என்று நிதி குஷ்வாஹா பதிலளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nidhi Kushwaha | Money, Mindset & Real Perspectives (@nidhi_kushwaa)

“>

எது எப்படியோ, பாதுகாப்பான வசதிக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டு, பெரிய இலக்குகளைத் தேடுவதை விட்டுவிடக்கூடாது என்ற அவரது கருத்து, பல இளைஞர்களைச் சிந்திக்க வைத்துள்ளது.