பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்ல கேப்டன்களை அடிக்கடி மாத்துற மாதிரி, இப்போ இந்திய கிரிக்கெட் டீம்ல டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான துணைக் கேப்டன் பதவியை வச்சு விளையாடிக்கிட்டு இருக்காங்க. போன வருஷம் அக்சர் பட்டேல், அப்புறம் சுப்மன் கில், இப்போ திலக் வர்மான்னு டி20 துணைக் கேப்டன் பதவி அடுத்தடுத்து கைமாறிக்கிட்டே இருக்கு.

ஆனா, துணைக் கேப்டன் பதவி கைக்கு வந்தாலும் திலக் வர்மாவோட ஃபார்ம் இப்போ ரொம்பவே மோசமா இருக்கு. தனக்கு பிடிச்ச 3, 4-வது இடங்கள் கிடைக்காம, 5-வது இடத்துல களம் இறங்கி பினிஷர் ரோல்ல அவர் தொடர்ந்து சொதப்பிட்டு வர்றாரு. இந்த வருஷத்துல விளையாடின 14 மேட்ச்ல வெறும் 29 சராசரியில தான் ரன் எடுத்திருக்காரு. இதனால அவரோட இடத்தை தக்கவைப்பதே இப்போ பெரிய கேள்விக்குறியா இருக்கு.

டி20  மட்டுமில்லாம, டெஸ்ட் போட்டியிலயும் பும்ரா, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல்னு துணை கேப்டன்களை அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்குறது இப்போ கிரிக்கெட் வட்டாரத்துல பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.