மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால், லோஹகாட் கோட்டைப் பகுதியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த வழக்கில் தற்போது புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்செயலாக நடந்த விபத்து அல்ல என்றும், கேதனின் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் சியாவும், அவரது காதலன் சேதனும் இணைந்து செய்த திட்டமிட்ட படுகொலை என்றும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். கைதான இவர்களின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்த போது, தொழிலதிபர் கேதனுடன் நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்பே, சியா தனது காதலன் சேதனை ரகசியமாகத் திருமணம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை போலீசார் மறுத்தனர்.

மேலும் ‘இந்தத் திருமணம் ஒருபோதும் நடக்காது’ என சியா தனது தோழியிடம் சாட்டிங்கில் கூறிய ஆதாரங்களும், கொலையை மறைக்க அவர்கள் பயன்படுத்திய ரகசியக் குறியீட்டு வார்த்தைகளும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.