சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணை வாலிபர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பதும், ஆத்திரமடைந்த அந்தப் பெண் உடனடியாகத் தன் பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கிச் சுடுவது போன்ற ஒரு பகீர் வீடியோ தற்போது இணையத்தில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எக்ஸ் தளத்தில் @manoj90251 என்ற பயனர், “இப்படிப்பட்ட நபர்களுக்கெல்லாம் நடுரோட்டில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” என்ற வீடியோவைப் பகிரவும், அது நிஜமாகவே நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி என நம்பி லட்சக்கணக்கான மக்கள் அதை பகிர்ந்து கொண்டனர்.
ஆனால், இந்த வீடியோவின் உண்மைத் தன்மையைக் கண்டறிய ‘லைட்ஹவுஸ் ஜர்னலிசம்’ குழுவினர் தீவிர ஃபேக்ட் செக் சோதனையில் இறங்கினர். வீடியோவை ஆய்வு செய்த போது, அந்தப் பைக்கின் விசித்திரமான வளைவு மற்றும் துப்பாக்கியிலிருந்து வந்த நெருப்பு ஆகியவற்றில் பல சந்தேகங்கள் எழுந்தன. உடனடியாக இந்த வீடியோவை அதிநவீன AI கன்டென்ட் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதித்துப் பார்த்தபோது, இது முற்றிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ 100% உறுதி செய்யப்பட்டுள்ளது.
ऐसे लोगों को तो बीच बाजार ही ठोक देना चाहिए था… बचाया ही क्यों..?? pic.twitter.com/6MPYgz0JX6
— Manoj Rathore 💯😜 (@manoj90251) June 28, 2026
“>
பர்தா அணிந்த பெண் ஒருவரை வாலிபர் தொல்லை செய்வது, அவர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்காக ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என்பதால், சமூக வலைதளங்களில் பரவும் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது மற்றும் திசை திருப்பக் கூடியது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
