அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கானச் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“அதிமுகவில் யார் வந்தாலும் அவர்களை நாங்கள் சேர்த்துக் கொள்வோம்; அனைவரும் ஓரணியில் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று கூறிய அவர், இந்த அதிரடி இணைப்பு குறித்துப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய இந்த அரசியல் நகர்வு, அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.