மேற்கு வங்காளத்தின் பாருய்பூர் பகுதியில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், கடந்த சனிக்கிழமை அன்று பிறந்தநாள் பரிசு வாங்குவதற்காக வெளியே சென்ற 11 வயது சிறுமி ஒருத்தி மாயமானாள்.
அதன் தொடர்ச்சியாக, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று சூர்யாபூர் ஹாட் பகுதியில் உள்ள ஒரு குளத்திலிருந்து அச்சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி காணாமல் போன அந்த முக்கிய நேரத்தில் சந்தேக நபர் ஒருவருடன் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Baruipur Update | বারুইপুর ধর্ষণ-খুনের দিনের সিসি ফুটেজ প্রকাশ্যে। ফুটেজে স্পষ্ট নাবালিকার উপস্থিতি। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নির্যাতিতা। নাবালিকার পাশে দেখা যাচ্ছে প্রভাস মণ্ডলকে। প্রভাস মণ্ডলকে গতকালই গ্রেফতার করে পুলিশ। সূর্যপুরের এক দোকানের ফুটেজ প্রকাশ… pic.twitter.com/9bSiwogZZf
— Republic Bangla (@BanglaRepublic) July 6, 2026
“>
மேலும், சிறுமியின் உடற்கூறாய்வு முடிவுகளில், அவள் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உடலில் பல இடங்களில் கடிபட்ட காயங்களுடன், இறுதியாகக் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரமான குற்றச்செயல் தொடர்பாகப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, பிரபாஸ் மொண்டல் மற்றும் முதன்மைப் குற்றவாளியான ஆனந்த் சர்தார் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். சிறப்பு விசாரணைத் குழு மற்றும் மாநில அதிரடிப் படை ஆகியவை இணைந்து இந்த வழக்கைப் போக்சோ சட்டத்தின்கீழ் விசாரித்து வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் வெடித்தன.
இந்த ஆத்திரத்தில், குற்றத்தில் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்பட்ட 26 வயது இளைஞர் ஒருவரைப் பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். இச்சூழ்நிலையில், மேற்கு வங்க முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளித்துள்ளார்.
