உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டா (Etah) பகுதியில், திருமணமாகி வெறும் 3 மாதங்களே ஆன நிலையில், இளம் பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஓயோ (OYO) ஹோட்டல் அறையில் கையும் களவுமாக மாட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், ரகசியமாக அவரைப் பின்தொடர்ந்து சென்று குறிப்பிட்ட அந்த ஹோட்டல் அறையை அதிரடியாகச் சோதனையிட்டுள்ளார்.
அப்போது அங்கு அவரது மனைவி வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். விசாரணையில், அந்த நபர் உத்தரப் பிரதேச காவல் துறையில் காவலராக (UP Police Constable) பணியாற்றி வரும் அந்தப் பெண்ணின் பழைய காதலன் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், ஆண்களின் தார்மீக நிலை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். ”
3-month marriage. OYO room. Alleged lover.
In Etah, a husband reportedly followed his wife to a hotel and found her with another man, said to be a UP Police constable.
If there was a lover, why marry another man?
Men are not backup plans. pic.twitter.com/IZvp1lCF4d
— ShoneeKapoor (@ShoneeKapoor) July 4, 2026
ஏற்கனவே ஒருவரைக் காதலித்து வரும் பட்சத்தில், எதற்காக வாழ்க்கை முழுவதையும் நம்பி வரும் வேறொரு அப்பாவி மனிதரைத் திருமணம் செய்து ஏமாற்ற வேண்டும்?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், “ஆண்கள் என்பவர்கள் பெண்களின் சுயநல ஆசைகளுக்கான மாற்றுத் திட்டமோ (Men are not backup plans) அல்லது தற்காலிகப் புகலிடமோ கிடையாது; திருமண பந்தத்தை இப்படி கொச்சைப்படுத்துபவர்களுக்குக் கடுமையான சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றும் கமெண்ட்டுகளில் தங்களது குமுறல்களையும் ஆக்ரோஷத்தையும் நெட்டிசன்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
