திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்து சில நாட்கள் கடந்துவிட்டாலும், அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு வரும் குரல்கள் இன்னும் ஓயவில்லை.

அந்த வகையில், பாக்யராஜ் இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமான நடிகை ஊர்வசி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு சினிமாவில் ஒரு முக்கிய அடையாளத்தை வாங்கிக் கொடுத்த தன் குருவை கடைசியாக கூட பார்க்க முடியாமல் போன ஏக்கத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.

பாக்யராஜ் மறைந்த தகவல் தெரிந்ததும் மறுநாள் அதிகாலையிலேயே புறப்படத் தயாரான தனக்கு, “சீக்கிரமாக அடக்கம் நடந்துவிடும், வேகமாகவாருங்கள்” என்று நடிகை ராதிகா போனில் கூறியதாகவும், ஆனால் பாதி வழியில் சென்று கொண்டிருக்கும்போதே அடக்கம் முடிந்துவிட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சியடைந்து காரை வீட்டிற்கே திருப்பிவிட்டதாகவும் ஊர்வசி கூறியுள்ளார்.

தனக்கு தமிழில் ஒரு முகவரியை வாங்கிக் கொடுத்த தன் குருவின் மறைவை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், யாராவது இது ஒரு கனவு, பாக்யராஜ் சார் மீண்டும் வந்துவிட்டார் என்று சொல்ல மாட்டாங்களா என்ற எண்ணம் இன்னும் தன் மனதை வாட்டுவதாக ஊர்வசி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.