“அடடா.. அந்தப் பொண்ணு தப்பா நினைச்சு கை நீட்டிடுச்சு, நாம அப்படியே பேசிக்கிட்டு இருந்தா அவங்க அசிங்கப்பட்டுடுவாங்களே!” என்று  தல அஜித்குமார் ஒரு பழைய நேர்காணலின் போது நிருபருக்கு நேர்ந்த தர்மசங்கடத்தைத் தனது அசாத்தியப் பண்பால் நொடியில் மாற்றிய அந்தப் பழைய வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அஜித் ஒரு முன்னணி ஊடகப் பெண்ணிற்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது, எதார்த்தமாகத் தனது கைகளை நீட்டிப் பேசிக்கொண்டிருந்தார்; ஆனால், அதைத் தவறாகப் புரிந்துகொண்ட அந்தப் பெண் நிருபர், அஜித் தனக்கு ஹேண்ட்ஷேக் (Handshake) கொடுக்க வருகிறார் என நினைத்துத் தனது கையை அஜித்தை நோக்கி நீட்டிவிட்டார்.

முதலில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த தல அஜித், அடுத்த நொடியே அந்தப் பெண்ணின் அசைவைக் கவனித்து, அவர் எல்லார் முன்னிலையிலும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், உடனடியாகப் பேச்சை நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே அந்தப் பெண்ணிற்குத் தனது கையைக் கொடுத்து அசத்தினார்.

“>

 

தல அஜித்தின் இந்த ஜென்டில்மேன் குணம் தான் தற்பொழுது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களால் பயங்கரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.