இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயதே ஆன இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக வேண்டும் என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும், வல்லுநர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரன் அவதிவகை எச்சரிக்கை மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்திய திறமையைப் பாராட்டிய சாம் கரன், “நான் 15 வயதில் சர்ரே பள்ளியில் படித்துக் கொண்டு சாதாரணமாகச் சுற்றிக் கொண்டிருந்தேன், ஆனால் வைபவ் இந்தச் சிறிய வயதிலேயே அகமதாபாத் மைதானங்களில் பந்துகளைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்; அவரது பேட்டிங்கை பார்ப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அது எனது பந்துவீச்சிற்கு எதிராக இல்லாதவரை சரி” என்று நகைச்சுவையாகவும் வியப்போடும் பேசியுள்ளார்.

​அதே சமயம், இவ்வளவு இளம் வயதில் இந்திய அணியில் விளையாடும்போது அவர் சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்தும் சாம் கரன் ஓப்பனாகப் பேசியுள்ளார். “இந்தியாவில் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அங்குள்ள அதீத அழுத்தங்களையும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் அவர் எப்படி கையாளப் போகிறார் என்பதுதான் அவரது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

அதோடு, பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இல்லாத இங்கிலாந்து போன்ற ஸ்விங் கண்டிஷன் ஆடுகளங்களில் விளையாடுவது 15 வயது ஓப்பனருக்கு அக்னிப்பரீட்சையாக மாறும்” என்று சாம் கரன் குறிப்பிட்டுள்ளார். சாம் கரனின் இந்த எதார்த்தமான மற்றும் அறிவுப்பூர்வமான கருத்துக்கள் தற்போது கிரிக்கெட் வட்டாரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயங்கர விவாதத்தை ஏற்படுத்தி செம்ம வைரலாகி வருகிறது.