தமிழகத்தில் தவெக ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் நிர்மல்குமார் மிகக் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் குதிரை பேரத்தில் ஈடுபடுவது வேறு யாரும் அல்ல, ஸ்டாலினும் அவரது ஆட்களும்தான் என்று அவர் ஓப்பனாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நேரடித் தூண்டுதலின் பேரில்தான் இந்த ஒட்டுமொத்த குதிரை பேரமும் அரங்கேறியுள்ளது என்றும், அதற்கான அத்தனை ஆதாரங்களும் தங்களது கைவசம் பக்கா தயாராக உள்ளது என்றும் கூறி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

​திமுகவின் இத்தகைய முயற்சிகள் தவெக அரசை ஒன்றும் செய்ய முடியாது என்று எச்சரித்த அமைச்சர் நிர்மல்குமார், தமிழகத்தில் இன்று தேர்தல் நடந்தாலும் கூட 100 சதவீதம் தவெக தான் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று சவால் விடுத்துள்ளார்.

தங்களது கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கொள்கைப் பிடிப்புடன் உறுதியாக இருப்பதாகவும், அவர்களை எந்தவொரு சக்தியாலும், எவ்வளவு பணம் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தில் ஆதாரங்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.