பாட்டி மற்றும் பேரக்குழந்தைகளுக்கு இடையே இருக்கும் பாசம் எப்போதுமே ஸ்பெஷலானது. தங்களது பிள்ளைகள் வளர வளர, அவர்கள் அடையும் வெற்றிகளைப் பார்த்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதிக்கும் பாட்டிகளை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், 79 வயதான பாட்டி ஒருவர் தனது விடுமுறையைக் கொண்டாடுவதற்காக மகிழ்ச்சியுடன் சுற்றுலா செல்ல தயாராகியுள்ளார். தான் பயணம் செய்யவிருக்கும் அந்த பிரம்மாண்டமான விமானத்தை ஓட்டப்போகும் முக்கிய பைலட்டே தனது சொந்த பேத்திதான் என்பது, விமானம் ஏறும் வரை அந்த பாட்டிக்குத் தெரியவே இல்லை.
A 79-year-old grandmother was getting ready for her vacation, completely unaware that the pilot waiting to welcome her on board was her own granddaughter.
The surprise came just before boarding, making it such a beautiful and emotional moment 🥹❤️ pic.twitter.com/b9wApgOdPX— Love Music (@khnh80044) July 1, 2026
விமானத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், பைலட்டுக்கான அந்த கம்பீரமான யூனிஃபார்மில் தனது பேத்தி மாஸாக நிற்பதை அந்த பாட்டி அறிந்துகொண்டார். தனக்கு இவ்வளவு பெரிய இன்ப அதிர்ச்சியை பேத்தி கொடுப்பாள் என்று எதிர்பார்க்காத அந்த பாட்டி, ஆனந்தக் கண்ணீருடன் அவளைக் கட்டிப்பிடித்து முத்தமிட்ட அந்த உணர்ச்சிகரமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களையும் வென்று வருகிறது. “தன் வாழ்நாளில் இதைவிட ஒரு பெருமையான தருணத்தை அந்த பாட்டி பார்த்திருக்க முடியாது” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த கியூட் வீடியோவை பகிர்ந்து தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
