​கூட்டணிக்குள் நடக்கும் அதிரடி அரசியல் மோதல்களுக்கு இடையே, திமுகவின் பழைய குதிரை பேர அரசியலை அம்பலப்படுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ள பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த காலத் தேர்தல்களில் திமுக தங்களை மிகக் கொடூரமாக ‘பிளாக்மெயில்’ செய்தது என்றும், தங்களின் தனித்துவத்தை முடக்கும் நோக்கில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி நிர்பந்தித்தது என்றும் வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

​மேலும், தற்பொழுது தவெக மற்றும் அதிமுக விவகாரத்தில் குதிரை பேரம் பற்றிப் பேசும் திமுகவுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள அவர், “தமிழ்நாட்டில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே இந்த திமுகதான்” என்று சாடியுள்ளார். கடந்த காலத்தில் மதிமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை திட்டமிட்டு பதவியை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அடுத்த 4-வது நாளே அவரை திமுகவில் இணைத்துக் கொண்ட துரோக வரலாற்றை வைகோ மேடையில் நினைவு கூர்ந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அணியை விமர்சிக்கும் திமுகவின் முகத்திரையை வைகோவே கிழித்துத் தொங்கவிட்டிருப்பது, தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.