பெங்களூருவைச் சேர்ந்த பிரமோத் பால் என்ற கார்ப்பரேட் ஊழியர் ஒருவர், கையில் அடுத்த வேலைக்கான எந்தவொரு ஆபரும் (Job Offer) இல்லாத நிலையிலும், தனது கார்ப்பரேட் வேலையை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளதாகப் பகிர்ந்துள்ள வீடியோ சோசியல் மீடியா ஏரியாவிலும் ஒட்டுமொத்த ஐடி மற்றும் கார்ப்பரேட் ஊழியர்கள் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும்  விவாதத்தையுமே கிளப்பியுள்ளது.

‘ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே’ (Humans of Bombay) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள அந்த வைரல் வீடியோவில், இரவு பகல் பாராமல் மாடு போல் உழைத்தும் தனக்குக் வெறும் 6 சதவீத சம்பள உயர்வு, அதாவது மாதத்திற்கு வெறும் 2,600 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட மெகா ஏமாற்றமே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று  போட்டுடைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Humans of Bombay (@officialhumansofbombay)

தனக்கு சீனியர் அனலிஸ்ட் (Senior Analyst) பொறுப்புக்கான வேலைகளைக் கொடுத்துவிட்டு, அனலிஸ்ட் என்கிற பதவியையும், ஒரு இன்டர்ன் (Intern) வாங்கும் அற்பச் சம்பளத்தையும் மட்டுமே நிறுவனம் வழங்கியதாக அவர் உருகியுள்ளார். இந்த வேலைப்பளு மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தான் ஒரு மனநல மருத்துவரைச் சந்திக்க வேண்டியிருந்தது என்றும், அவரது ஒரு முறை ஆலோசனைக் கட்டணமே 2,000 ரூபாய் மற்றும் மன அழுத்த மேலாண்மை சிகிச்சைக்கான ஒவ்வொரு செஷனுக்கும் 3,000 ரூபாய் செலவானதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், “உங்களுடைய வருட சம்பள உயர்வை விட உங்களது மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம் அதிகமாக இருந்தால், நீங்கள் அந்த வேலையை விட்டு வெளியேறுவது தான்  நல்லது பாஸ்” என்று நையாண்டியாகக் கூறியுள்ளார்.

பெங்களூரு அருகே உள்ள கோலார் பகுதியைச் சேர்ந்த பிரமோத் பால், தனது குடும்பக் கடன்களை அடைக்க 8 லட்சம் ரூபாய் கல்விக்கடன் வாங்கி படித்து, கடந்த 4 ஆண்டுகளாக ஒரு நிதி நிறுவனத்தில் நிதி மேலாளராக  உழைத்து வந்துள்ளார். “நம்ம ஏரியா லோக்கல் டீக்கடைக்காரங்க கூட மாசத்துக்கு 2 லட்சம் ரூபாய் அசால்ட்டா சம்பாதிக்கிறாங்க, ஆனா நான் வெறும் கடலை மிட்டாய் காசுக்காக இங்கே மாங்கு மாங்குனு வேலை பார்த்துட்டு இருக்கேன்” என்று தனது  ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்னும் 3 லட்சம் ரூபாய் எஜுகேஷன் லோன் பாக்கி இருக்கும் நிலையிலும், அடுத்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியோடு இந்த வேலையிலிருந்து தான் முழுமையாக விடு பெறப் போவதாகவும், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாவிட்டாலும் தற்பொழுது தனது முகத்தில் இருக்கும் மெகா குளோயிங் (Glow) தனக்கு நிம்மதியைத் தருவதாகவும் அவர் பேசியுள்ளார்.