சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் ஒரு மாம்பழ ஜூஸ் (Mango Juice) தயாரிப்பு தொழிற்சாலையின் கொடூரமான வீடியோ, அதைப்பார்ப்போரை முகம் சுளிக்க வைப்பதுடன் சோசியல் மீடியா அதிர்ச்சி அலையையுமே கிளப்பியுள்ளது. கோடைக்காலத்தில் பலருக்கும் மிகவும் பிடித்தமான குளிர்ச்சியான மேங்கோ ஜூஸ் சந்தையில் எப்படி அசுத்தமாகத் தயாரிக்கப்படுகிறது என்பதை இந்த வீடியோ தோலுரித்துக் காட்டியுள்ளது.
அந்த வைரல் வீடியோவில், ஒரு தொழிற்சாலையின் தரைப்பகுதி முழுவதும் மாம்பழக் கூழ் (Mango Pulp) அப்படியே மஞ்சள் நிறத்தில் கொட்டிக் கிடப்பதும், அங்கு வேலை செய்யும் இரண்டு பெண்கள் எந்தவிதமான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாமல், வெறும் காலுடன் அந்த ஜூஸ் கூழுக்கு நடுவே நின்றுகொண்டு வேலை செய்வதும் பதிவாகியுள்ளது.
रियल मैंगो जूस पी लो गाइज!!@fssaiindia आप लोग कहें तो दो चार बॉटल आपके ऑफिस भी भेजवा दूँ?? pic.twitter.com/TTpX9mEn62
— खुरपेंच (@khurpenchh) June 30, 2026
அதில் ஒரு பெண் தரையில் கிடக்கும் கூழை ஒரு பழைய வாளியின் மூலம் அள்ளி அசுத்தமான இயந்திரத்தில் ஊற்றுகிறார். மேலும், அவர்கள் கைகளில் ஒரு கையுறை மட்டுமே அணிந்து கொண்டு மற்றொரு வெறும் கையால் பழங்களையும் அந்த அசுத்தங்களையும் நேரடியாகத் தொடுவது சுகாதார விதிகளுக்கு விடுக்கப்பட்ட மெகா சவாலாக அமைந்துள்ளது.
இந்தக் கொடூரமான காட்சியை எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் @khurpenchh என்ற பயனர் பகிர்ந்து, “கைஸ், எல்லாரும் ரியல் மேங்கோ ஜூஸ் குடிங்க!” என்று கடுமையான நையாண்டியுடன் பதிவிட்டுள்ளார். அத்தோடு நிறுத்தாமல் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை (FSSAI) நேரடியாக வம்புக்கு இழுத்து, “நீங்கள் சொன்னால் இப்படிப்பட்ட இரண்டு நான்கு பாட்டில்களை உங்கள் ஆபீஸுக்கே பார்சல் அனுப்பி வைக்கிறேன்” என்று அதிரடியாகத் கேட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், “முதன்முதலில் பார்க்கும்போது இது ஜூஸ் தயாரிக்கும் இடம் போலத் தெரியவில்லை, ஏதோ சாக்கடைத் தண்ணீர் ஓடுவது போலத்தான் பாஸ் இருக்கிறது” என்றும், “இனிமேல் கடையில விற்கிற எந்தவொரு கமர்ஷியல் ஜூஸையும் குடிக்கவே மாட்டோம், எதுவாக இருந்தாலும் வீட்டிலேயே தயாரிப்பதுதான் உடம்புக்கு நல்லது” என்றும் தங்களது ஆதங்கத்தை அள்ளி வீசி வருகின்றனர்.
