“வைபவ் சூர்யவன்ஷியைப் பத்தி சோசியல் மீடியாவுல என்ன பேச்சு ஓடுதுன்னு எனக்கு நிஜமாவே தெரியாதுங்க, நான் இன்ஸ்டாகிராமோ நியூஸோ பார்க்குறதே இல்லை!” என்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பாக நடந்த பிரஸ் மீட்டில் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அசால்ட்டாகக் கூறிய பதில் தற்பொழுது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

15 வயதான இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்கக் கோரி ரசிகர்கள்  பிரஷர் கொடுப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் விமல் குமார் கேட்ட கேள்விக்கு, ஸ்ரேயாஸ் ஐயர் நொடிகளில் கூலாகப் பதிலளித்து மழுப்பினார்.

“>

கேப்டனின் இந்த அலட்சியமான பதிலைப் பார்த்து நெட்டிசன்கள் அவர் மீது கோபப்பட்டு, ஆணவக்காரர் எனத் திட்டித் தீர்த்தாலும், கேள்வி கேட்ட பத்திரிகையாளர் விமல் குமாரோ ஸ்ரேயாஸ் மிகவும் புரொபஷனலாகப் பதிலளித்தார் என்று அவருக்கு ஆதரவாக முட்டுக் கொடுத்துள்ளார்.

 “அவர் எனக்கு எந்த எதிர்மறையான பதிலையும் அளிக்கவில்லை. அவர் ஒரு தொழில்முறை பதிலை அளித்தார். ஸ்ரேயஸின் பதில் சரியானது. இது அவருடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. அவர் மிகவும் தொழில்முறை பதிலை அளித்தார், அது எனக்குப் பிடித்திருந்தது,” என்றும் விமல் குமார் கூறினார்.

அயர்லாந்துக்கு எதிரான தொடரைத் தோற்றுவிட்டு, இங்கிலாந்து மண்ணில் இன்று தனது முதல் சவாலைச் சந்திக்கவுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், தனது வியூகங்களை ரகசியமாக வைப்பதற்காகவே இப்படிப் பேசினாரா அல்லது உண்மையில் அவருக்குத் தலைக்கனம் வந்துவிட்டதா என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் காரசாரமாக மோதி வருகின்றனர்.

“>

இன்று இரவு செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி தொடங்கவுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.