சமூக ஊடகங்களில் தற்போது பலவிதமான குறும்புத்தனமான வீடியோக்கள் வெளியாகி மக்களைக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், துருக்கி நாட்டின் பாரம்பரிய ஐஸ்கிரீம் வியாபாரிகளின் குறும்புத்தனமான விற்பனை முறையை அடிப்படையாகக் கொண்டது.

அதோடு பொதுவாக, துருக்கி ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஐஸ்கிரீமைத் தருவது போல போக்கு காட்டி, கையில் சிக்காமல் நீண்ட கரண்டியை வைத்து விளையாடி ஏமாற்றுவது வழக்கம். இந்த வீடியோவிலும் அதேபோன்ற ஒரு குறும்புத்தனமான சூழலே நகைச்சுவையாகக் கையாளப்பட்டுள்ளது.

“>

ஆனால், இந்த வீடியோவின் சுவாரசியமான ட்விஸ்ட் என்னவென்றால், எப்போதும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி விளையாடும் அந்த ஐஸ்கிரீம் வியாபாரிக்கே, வாடிக்கையாளர் ஒருவர் எதிர்பாராத விதமாக ஒரு மரண மாஸ் பதிலடி கொடுக்கிறார். ஐஸ்கிரீம் பிராங்க் செய்து வாடிக்கையாளரை வெறுப்பேற்ற நினைத்த வியாபாரியை, அந்த வாடிக்கையாளர் தனது சமயோசித புத்தியால் தலைகீழாக ஏமாற்றி விடுகிறார்.

இதனால் அதிர்ச்சியடையும் அந்த வியாபாரி, இனிமேல் தனது வாழ்க்கையிலேயே யாரிடமும் இது போன்ற ஐஸ்கிரீம் பிராங்க் செய்யவே கூடாது என்று நினைக்கும் அளவுக்கு இந்த காமெடி காட்சி அமைந்துள்ளது. பார்ப்போரை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் இந்த பொழுதுபோக்கு வீடியோ, இணையத்தில் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.