ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து பெண் ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது, அந்த ஆட்டோ ஓட்டுநர் திடீரென பயணத்தின் பாதியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, மதிய உணவு சாப்பிடுவதற்காகத் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனால் ஆட்டோவிலேயே அந்தப் பெண் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநரின் இந்த பொறுப்பற்ற செயலால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், ஓட்டுநர் செய்த காரியத்தால் தனக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு மதிய உணவுக்காக ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்த நேரத்தையும் கணக்கில் சேர்த்து, அவரிடம் கூடுதலாக ₹30 வசூலித்துள்ளார். இந்த சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அவர், “இனிமேல் யாரும் ஆட்டோக்களைப் பயன்படுத்த வேண்டாம்” என்று தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.