மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி கலாநிதி என்பவர் மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் பின்தொடர்ந்து வந்த ஒரு மர்மக் கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது. அவருடன் சென்ற அஜித் என்பவர் படுகாயங்களுடன் உயிர்த்தப்பினார்.

இதில் பலத்த காயமடைந்த கலாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற அஜித் என்பவர் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக நிர்வாகி கலாநிதியை வெட்டிக்கொலை செய்த மர்மக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பாக திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.