தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏராளமான குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார். இவர் பலரை படிக்க வைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முடிந்தவரை பல உதவிகளை செய்து மாற்றம் என்ற டிரஸ்ட் மூலமாகவும் தற்போது விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
இதற்கு தற்போது வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி ஒரு கட்சியில் சேர்ந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் உழைத்த பிறகு தான் கட்சி மேலிடம் பார்த்து நமக்கு பதவிகளையும் பொறுப்புகளையும் தர வேண்டும் எனவும் எடுத்த உடனேயே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பக் கூடாது எனவும் கூறினார். அதோடு நடிகர் விஜய்க்காக போஸ்டர் ஒட்டி திருச்சி கிழக்குக்காக ஏங்ங்குபவர்கள் அவர்கள் கட்சியில் இருக்கலாம். அப்படி இருக்கும்போது வந்த உடனே நான் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்.
நான் திருச்சி கிழக்கில் போட்டியிட மாட்டேன். எனக்கும் என் குழந்தைகளுக்கும் அன்புமணி ராமதாஸ், கலைஞர் கருணாநிதி ஆகியோர் உதவி செய்துள்ள நிலையில் என்னுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் மல்லர் கம்பம் கற்றுக் கொண்டபோது உதயநிதி ஸ்டாலினிடம் அதை கூற உடனடியாக முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்து அதனை பார்வையிட்டார். இதேபோன்று நடிகராக இருக்கும் போதே நான் ஒரு குழந்தையை விஜயிடம் அழைத்து செல்ல ஆபரேஷனுக்கு உதவி செய்தார். இப்போது முதலமைச்சர் ஆகிவிட்டதால் அவர் 1000 என 2000 குழந்தைகளுக்கு கூட உதவி செய்வார் நான் மிகவும் சந்தோஷமாகவும் தைரியமாகவும் அவரிடம் இதை போய் கேட்பேன்.
அதே நேரத்தில் திருச்சி கிழக்கு வேண்டும் என்று கேட்க மாட்டேன். மேலும் திருச்சி கிழக்கில் நான் போட்டியிட மாட்டேன் என்பதற்காக அரசியலுக்கு வர மாட்டேன் என்று அர்த்தம் கிடையாது நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். யாருடன் சேர இருக்கிறேன் என்பதை நானே விரைவில் அறிவிக்கிறேன். அதுவரை பொறுமையாக காத்திருங்கள் என்று கூறினார். மேலும் சமீபத்தில் தெருநாய்கள் விவகாரம் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் அதற்கும் வீடியோவில் விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Do your duty. Don’t expect anything in return.
As announced earlier, here is my clarification regarding the Trichy election and my recent press meet.
Thank you all for your love and support 🙏🏼#serviceisgod pic.twitter.com/JlIlkxVKdr
— Raghava Lawrence (@offl_Lawrence) June 30, 2026
