ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் செல்போன்களை ஜன்னல் வழியாகப் பறித்துக்கொண்டு தப்பிப்பது வழக்கமான குற்றச் செயலாக மாறிவரும் நிலையில், அத்தகைய திருடன் ஒருவருக்கு ஆன்ட்டி ஒருவர் கொடுத்த பாடம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் புறப்படும் சமயத்தில், ஜன்னல் வழியாக உள்ளே கையை விட்டு அந்த ஆன்ட்டியின் செல்போனைத் திருட ஒரு நபர் முயற்சி செய்துள்ளார்.
ஆனால், சற்றும் எதிர்பாராத அவர், மின்னல் வேகத்தில் அந்தத் திருடனின் கையைப் பிடித்து ரயிலுக்குள் ஜன்னல் வழியாக உள்ளே இழுத்து, அங்கிருந்த உறவினர்களுடன் இணைந்து அந்தத் திருடனை வெளுத்து வாங்கியுள்ளார். இந்த அதிரடியான வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போனைப் பறிக்க வந்தவனை அந்த ஆன்ட்டி துணிச்சலோடு கையாண்ட விதத்தைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர்.
Aunty grabbed him by just one hand 💀😂 pic.twitter.com/zVW2XjMpq5
— SriSathya (@sathyashrii) June 29, 2026
“பெண்களைப் பலவீனமானவர்கள் என்று நினைக்கும் திருடர்களுக்கு இது ஒரு சரியான பாடம்” என்றும், அவருடைய வீரத்தைப் பாராட்டி பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். குற்றவாளிகள் பயப்படும் வகையில் அமைந்த இந்தச் சம்பவம், ரயில் பயணிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய விழிப்புணர்வையும், துணிச்சலையும் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
