அகமதாபாத்தைச் சேர்ந்த ‘நியூகோன்ஸ்’ (Pneucons) நிறுவனத்தின் நிறுவனரான பிரிதேஷ் லக்கானி என்பவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு விசித்திரமான பதிவு, தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் ஜாதகம் மற்றும் மூடநம்பிக்கை குறித்து மிகப்பெரிய புயலையும் அனல் பறக்கும் விவாதத்தையுமே கிளப்பியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அந்த அதிரடிப் பதிவில், தனக்குத் தெரிந்த நல்ல வேலையில் இருக்கும் 28 வயதே ஆன ஒரு ஐடி இன்ஜினியர் (IT Engineer) மற்றும் ஒரு பச்சிளம் குழந்தையின் தந்தையாக இருக்கும் நபர் ஒருவருக்கு, அவரது ஜாதகத்தில் (Kundli) உள்ள ஒரு விசித்திரக் கணிப்புக் காரணமாக இன்றுவரை எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட அவரது குடும்பத்தினர் அனுமதிப்பதில்லை என்கிற மெகா ஷாக்கிங் விபரத்தைப் போட்டுடைத்துள்ளார்.
Devils are not born; they are made, sometimes by horoscope.
I met a 28-year-old IT engineer and father to a toddler. He is not allowed to drive any vehicle because his kundli says he might kill someone.
His father drops him at the office every day. He has never learned how to…
— Pritesh Lakhani (@priteshlakhani) June 28, 2026
அந்த இளைஞரின் ஜாதகக் கணிப்பின்படி, அவர் ஒருவேளை வாகனம் ஓட்டினால் யாரையாவது விபத்தில் கொன்றுவிடுவார் என்று கூறப்பட்டுள்ளதால், அவர் இதுவரை ஒரு சாதாரண சைக்கிளைக் கூட ஓட்டக் கற்றுக்கொள்ளவில்லை என்றும், இதனால் தினமும் அவரது தந்தைதான் அவரை ஆபீஸில் கொண்டு போய் விடுகிறார் என்றும் பிரிதேஷ் லக்கானி வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த அவர், “சரி, அந்த ஜாதகத்தில் தற்போதைய ஏஐ (AI) தொழில்நுட்பம் பற்றி என்ன சொல்லியிருக்கிறது?” என்று அவரது தந்தையிடம் கிண்டலாகக் கேட்டதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த விசித்திரமான பதிவு தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி, படித்தவர்கள் கூட ஜாதகத்தை நம்பித் தங்களின் சொந்தப் பகுத்தறிவை இப்படி அடகு வைக்கலாமா என்று ஒரு தரப்பினரும், ஜாதகக் கணிப்புகள் சில நேரங்களில் சரியாக இருக்கும் என்று மறுதரப்பினரும் நெட்டிசன்களாகத் தங்களுக்குள் இரண்டு பிரிவாகப் பிரிந்து பயங்கரமாக மோதி வருகின்றனர்.
மேலும், ஜாதகத்தில் தங்களுக்கு நேர்ந்த இது போன்ற சுவாரசியமான மற்றும் விசித்திரமான விபரீத சம்பவங்களையும் நெட்டிசன்கள் அள்ளிக் கொட்டி வருவதால், “என்னதான் இருந்தாலும் 28 வயசு ஐடி இன்ஜினியரை சைக்கிள் கூட ஓட்ட விடாம இன்னும் அவங்க அப்பா கூட்டிட்டுப் போறது கொஞ்சம் ஓவர் தான் பாஸ், அறிவை நம்பணும்!” என்ற கமெண்ட்டுகளுடன் இணையத்தில் இந்த நியூஸ் தாறுமாறாக ட்ரெண்டாகி வருகிறது.
