ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் பகுதியில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையுமே உலுக்கிப் போடும் வகையிலான ஒரு மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டை விட்டு காணாமல் போன 13 வயது சிறுமி ஒருவரை, ஒரு ரிக்ஷாக்காரன் கடத்திச் சென்று அங்குள்ள ஒரு ஹோட்டல் முதலாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு விற்றுள்ளான். அந்த ஹோட்டல் முதலாளி மற்றும் அவனது ஆட்கள் அந்தச் சிறுமியைச் சிறைபிடித்து, கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட காமுகர்கள் அந்தப் பிஞ்சு உடலைத் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தத் துயர சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் தற்போது காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. ​இந்த விவகாரம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே மிகப்பெரிய கொந்தளிப்பையும் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தியரமான சம்பவத்தை அடுத்து, அந்தப் பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் 150-க்கும் மேற்பட்ட கள்ள ஹோட்டல்களை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும் எனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கிப் போராடி வருவதோடு, சிறுமியை விற்ற ரிக்ஷாக்காரன், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட 30 காமுகர்கள் மீதும் பாரபட்சமின்றி மிகக் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.