ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் பயணிகள் அசந்து தூங்கும்போது உடமைகளும் குழந்தைகளும் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், “ரயிலில் கவலையின்றி தூங்கினால் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்” என ரயில்வே பாதுகாப்புத் துறை பயணிகளுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட தூர ரயில் பயணங்களின் போது பயணிகள் தங்களை அறியாமல் தூங்கிவிடுவதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கொள்ளைக் கும்பல், கண்ணிமைக்கும் நேரத்திற்குள்பைகள், நகைகள் மற்றும் குழந்தைகளைக் கூட கடத்திச் செல்லும் கொடூரம் அரங்கேறி வருகிறது.
இதனால் பயணத்தின் போது தூங்கும்போதோ அல்லது ஓய்வெடுக்கும்போதோ ஒவ்வொரு நிமிடமும் தங்கள் குழந்தைகள் மற்றும் பொருட்கள் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
रेलवे स्टेशन या ट्रेन में बेफिक्र होकर सोए, तो समझो सब कुछ खोए!
यात्रा के दौरान सोते या आराम करते समय अपने बच्चों और सामान पर हर पल नजर रखें।
सजग रहें, सुरक्षित रहें!#UttarakhandPolice pic.twitter.com/yLdddIiHzi
— Uttarakhand Police (@uttarakhandcops) June 27, 2026
“>
ஒரு நொடி அலட்சியம் ஒட்டுமொத்த வாழ்நாளையும் சோகத்தில் ஆழ்த்திவிடும் என்பதால், “எச்சரிக்கையுடன் இருங்கள், பாதுகாப்புடன் இருங்கள்” என்ற விழிப்புணர்வு செய்தி தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
