நெஞ்சை உலுக்கும் ஒரு சோகமான சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்பவர் நெஞ்சங்களை அப்படியே ரணமாக்கி வருகிறது. கூலி வேலை செய்யும் ஏழை தந்தை ஒருவர், நாள் முழுவதும் வியர்வை சிந்தி உழைத்துவிட்டு மாலையில் பசியோடு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் அவரது பச்சிளம் குழந்தை பசியால் கதறி அழுதுகொண்டே இருந்துள்ளது. பதறிப்போன தந்தை வீடெல்லாம் மனைவியைத் தேடியபோதுதான், அவள் தங்களை நடுத்தெருவில் தவிக்கவிட்டுவிட்டு, வேறொரு இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் என்ற இடி போன்ற அதிர்ச்சித் தகவல் அவருக்குத் தெரியவந்துள்ளது.

​கையில் தாய்ப்பால் இல்லாமல் பசியால் துடிக்கும் தனது செல்ல மகளின் உயிரைக் காப்பாற்ற, எவ்வித வழியுமின்றி அலறியடித்துக் கொண்டு அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு ‘லாக்டோஜன்’ (Lactogen) பால் பவுடர் வாங்க ஓடியுள்ளார். இதுவரை குழந்தைக்குப் பால் பவுடர் கலக்கிப் பழக்கம் இல்லாததால், அந்த மெடிக்கல் ஷாப் ஊழியரிடம், “அண்ணே, இதை எப்படிக் கலக்கி குழந்தைக்கு ஊட்டணும்?” என்று கண்கள் கலங்கக் கேட்டுள்ளார்.

“இதெல்லாம் உங்க மனைவிக்குத் தெரியுமே, அவங்ககிட்ட கேளுங்க” என்று ஊழியர் கூற, அதற்கு அந்தத் தந்தை, “அவ வேறொருத்தனுடன் ஓடிவிட்டாள்” என்று நெஞ்சடைத்துப் போய்க் கூறிய வார்த்தைகள் அங்கிருந்தவர்களை உறைந்து போகச் செய்துள்ளது. பெற்ற குழந்தையை பசியில் தவிக்கவிட்டுவிட்டு ஓடிய அந்தப் பெண்ணின் துரோகத்தையும், தாயாகவும் தந்தையாகவும் மாறி தன் குழந்தையைக் காப்பாற்றத் துடிக்கும் அந்த ஏழைத் தந்தையின் கண்ணீரையும் கண்டு நெட்டிசன்கள் ஒட்டுமொத்தமாக சோகத்தில் மூழ்கியுள்ளனர்.