திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பெண், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த துயர சம்பவத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் வாயு கசிவு மற்றும் உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினரும் மீட்புப் படையினரும் தீவிர விசாரணை மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக முதலமைச்சர் விஜய் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.