தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரஸ் மீட் வீடியோ ஒன்று. சட்டசபை முடிந்து வந்த உதயநிதி, செய்தியாளர்களிடம் விஜய்யின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினார். “முதலமைச்சர் முக ஸ்டாலின் எப்போதுமே ஸ்கிரிப்ட் பார்த்துதான் பேசுகிறார்” என்று சமீபத்தில் விஜய் விமர்சித்ததை கிண்டல் செய்யும் விதமாக, கையில் இருந்த பேப்பரைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டே, “முதலமைச்சர் ஸ்கிரிப்ட் எடுத்துட்டு வந்திருக்காருன்னு ஸ்கிரிப்ட் பார்த்துச் சொல்றான்” என்று நக்கலாகப் பேசினார்.

​ஆனால், விஜய்யை டேமேஜ் செய்யப் போய் உதயநிதி செய்த இந்த காரியம் அவருக்கே ரணகளமாக முடிந்துள்ளது. “அடுத்தவர் பேப்பரைப் பார்த்துப் படிக்கிறார் என்று விமர்சிப்பவர், அதே நேரத்தில் கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு அதைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறாரே” என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். விஜய்யை ஸ்கிரிப்ட் என்று விமர்சித்த உதயநிதி, தன் கையில் இருக்கும் ஸ்கிரிப்ட்டையே மறந்துவிட்டாரா என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.