தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவருக்குப் பலரும் வாழ்த்து மழை பொழிந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  எந்தவொரு வாழ்த்துப் பதிவும் போடாமல் அமைதி காத்தது தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, கமல்ஹாசன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என அரசியல் மற்றும் திரையுலகப் பட்டாளமே முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைக் குவித்த நிலையில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் மட்டும் கடைசி வரை ஒரு வாழ்த்து கூடச் சொல்லாமல் மௌனம் காத்தது ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே ரஜினி – விஜய் இடையே வசூல் ஒப்பீடு, ரசிகர் மோதல் எனப் பல வருடங்களாக ஒரு மறைமுக பனிப்போர் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், விஜய் வெறும் நடிகராக இல்லாமல் தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும் ரஜினி வாழ்த்துத் தெரிவிக்காதது ஏன் என நெட்டிசன்கள் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதனால்  ரஜினியும் காத்திருந்த ரசிகர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் புதிய அரசியல் மற்றும் சினிமா பனிப்போர் சிக்னலாகப் பார்க்கப்பட்டு காட்டுத்தீயாய் பரவி வருகிறது.