சமூக ஊடக தளம் ஒன்றில் பெற்றோர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு, தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் கலவையான கருத்துகளையும் கிளப்பியுள்ளது.

மேலும் அந்தப் பதிவில், தனது 14 வயது மகன் அவனது காதலியைத் தங்களது வீட்டில் வந்து இரவு தங்கிச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளதாகவும், அதற்கு ஒரு பெற்றோராக என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்துப் பிற பயனர்களின் ஆலோசனைகளையும் அவர் கோரியிருந்தார். இந்த விசித்திரமான மற்றும் தர்மசங்கடமான கேள்வி, சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பதிவிற்குப் பதிலளித்த இணையவாசிகள் தங்களது வெவ்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் ஒரு தரப்பினர், “அவர்கள் அதைச் செய்ய விரும்பினால் எப்படியும் செய்வார்கள், எனவே நம் கண்காணிப்பில் நம் வீட்டிலேயே இருப்பது பாதுகாப்பானது” என்று கூறி, தற்காலப் போக்குக்கு ஏற்பப் பெற்றோர்கள் சற்றே நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால், மற்றொரு தரப்பினரோ இதற்கு முற்றிலும் எதிர்ப்புத் தெரிவித்து, 14 வயது என்பது மிகவும் சிறிய பருவம் என்றும், இத்தகைய வயதில் இரவு தங்குதல்களுக்கு அனுமதி அளிப்பது தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்றும் கண்டித்துள்ளனர். மேலும், டீனேஜ் வயதினரைக் கையாள்வதில் உள்ள சவால்களையும், பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையேயான எல்லைகளின் அவசியத்தையும் இந்த விவாதம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.