இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலி தனது ‘ஒன்8’ (One8) பிராண்ட் சார்பாக டெல்லியில் புதிய ரெட் ஷூஸ் கலெக்ஷனை (Red Shoes Collection) அறிமுகப்படுத்திய விழாவில், டெஸ்ட் கிரிக்கெட் கம் பேக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பகீர் பதில் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த புதிய மாடல் சிவப்பு நிற ஷூக்களுக்கு விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் மொத்த ரன்களான 9,230 ரன்களைக் குறிக்கும் விதமாக, சரியாக 9,230 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் செய்தியாளர் ஒருவர் விராட் கோலியிடம், “இந்த சிவப்பு நிற ஷூவின் விலை 9,230 ரூபாயாக உள்ளது, இது உங்களது டெஸ்ட் ரன்களின் எண்ணிக்கையாகும்; அப்படியென்றால், இந்த ஷூவின் விலையை இன்னும் அதிகமாக்குவதற்காக நீங்கள் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் மாஸாக கம் பேக் கொடுக்க விரும்புவீர்களா?” என்று சற்று வித்தியாசமாகக் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் கைகளை அசைத்து சிரித்தபடியே பதிலளித்த விராட் கோலி, “இல்லை, இல்லை.. நான் இந்த ஷூவை இதைவிடக் குறைந்த விலைக்கே விற்றுவிடுவேன்; நான் டெஸ்ட் கிரிக்கெட்டை முடித்துக்கொண்டேன் (I AM DONE)” என்று மிக ஓப்பனாகக் கூறி ஒட்டுமொத்த அரங்கிற்கும் பேரதிர்ச்சியை அளித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் மெஷினாக வலம் வந்த விராட் கோலி, தனது விளையாட்டுப் பயணம் போதும் என்ற தொனியில் “ஐ ஆம் டன்” என்று பொதுமேடையில் முற்றுப்புள்ளி வைப்பது போல் பேசியுள்ள இந்த அதிரடி அறிக்கை தற்போது சோசியல் மீடியாக்களில் காட்டுத்தீயாய் பரவி, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.