ஒரு குடும்பத்தின் அஸ்திவாரமாக விளங்கும் அப்பாக்களின் தியாகங்கள் பெரும்பாலும் வெளியில் தெரிவதே இல்லை அவை மௌனத்தால் நெய்யப்பட்டவை. நமக்கு ஒரு சிறு கஷ்டம் என்றாலும் துடித்துப்போகும் அப்பாக்கள், தங்களுக்கு வரும் உடல்நலக்குறைவுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல், “எனக்கொன்றும் இல்லை” என்று சிரித்தபடியே தினமும் வேலைக்குக் கிளம்புவார்கள்.

மேலும் தங்களுக்கு என்று ஒரு புது சட்டை கூட எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பணத்தை மிச்சப்படுத்தி நம்முடைய கல்வித் தேவைகளுக்கும், பள்ளி-கல்லூரி கட்டணங்களுக்கும் முன்னுரிமை கொடுப்பார்கள். தன் பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தன் சொந்த ஆசைகளையும், தேவைகளையும் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் தியாகம் செய்யும் உன்னத மனிதர்கள் அவர்கள்.

Best Father's Day Gift Ideas for Every Type of Dad – Bigsmall.in

இதனால் அப்பாக்கள் தங்கள் உணர்ச்சிகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை, ஆனால் அவர்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஆழமான அன்பு ஒளிந்திருக்கிறது. கடுமையான வெயிலிலும், மழையிலும் அவர்கள் உழைப்பது தன் குடும்பம் ஒருபோதும் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

அதோடு வெளியில் ஒரு கண்டிப்பான மனிதராகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் துடிக்கும் மென்மையான இதயம் கொண்டவர்கள். வார்த்தைகளால் விவரிக்க முடியாத, விளம்பரப்படுத்தப்படாத அவர்களின் இந்த “மறைமுக தியாகங்கள்” தான் நம் வாழ்வின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் உண்மையான அந்த தியாகத்தை மதித்து இந்த தந்தையர் தினத்தில் அப்பாக்களை போற்றுவோம்மாக.