தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசை ஆதரிப்பது என்ற இடதுசாரி கட்சிகளின் முடிவு முற்றிலும் சரியானதுதான் என சிபிஎம் (CPM) மூத்த தலைவர் சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு அக்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை இடதுசாரிகள் எடுத்து வரும் வேளையில், தற்பொழுது சிபிஎம் தலைவர் சண்முகம் தவெக-வின் அரசியல் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இது குறித்து அவர் பேசுகையில், “வெறும் இலவச நலத்திட்டங்கள் மட்டுமே மக்களை எப்போதும் திருப்திப்படுத்திவிடாது என்பதை திமுகவினர் தற்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். ‘விஜய் ஒரு நடிகர், அவருக்கு அரசியல் மற்றும் ஆட்சி என்றால் என்னவென்றே தெரியுமா’ என திமுகவினர் முன்வைத்த விமர்சனங்கள் எவையுமே மக்கள் மத்தியில் எடுபடவில்லை” என்று சாடியுள்ளார்.
மேலும், “திமுக அரசின் லஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளைத் தவெகவினர் சோஷியல் மீடியா மூலம் மிகத் துல்லியமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததே அவர்களின் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்தியும், திமுகவின் விமர்சனங்களைச் சாடியும் கம்யூனிஸ்ட் தலைவர் சண்முகம் பேசியுள்ள இந்த கருத்து தற்பொழுது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
