சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜி7 உச்சிமாநாட்டில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வானளவிற்குப் பாராட்டிப் பேசியுள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற உலகத் தலைவர்களின் கூட்டத்தில் பேசிய டிரம்ப், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தேவதூதரைப் போல மிகவும் இனிமையானவர்; அதே நேரத்தில் தனது கொள்கைகளிலும், நாட்டின் நலனிலும் மிக உறுதியான ஒரு தலைவர்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும், இந்தியாவின் பொருளாதாரத்தை அசுர வேகத்தில் முன்னேற்றுவதிலும் பிரதமர் மோடி காட்டி வரும் அசாத்திய தலைமைப் பண்பு தம்மைக் கவர்ந்துள்ளதாக டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையேயான இந்த நட்பு மற்றும் நெருக்கம், சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும், முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. டிரம்ப்பின் இந்தத் திறந்தவெளிப் பாராட்டு, உலக அரங்கில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், பிரதமர் மோடியின் உலகளாவிய செல்வாக்கிற்கும் கிடைத்துள்ள பெரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபரே, பிற உலகத் தலைவர்களின் முன்னிலையில் இந்தியப் பிரதமரை “தேவதூதர்” என்று வர்ணித்துப் பேசியிருப்பது, சர்வதேச ஊடகங்களில் தற்போதைய மிக முக்கிய ஹாட் டாப்பிக்காக  மாறியுள்ளது.