இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இப்போட்டி துவங்குவதற்கு முன்பு மைதானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மைதானத்தில் உள்ள ஒலிபெருக்கியில் பாலிவுட்டின் பிரபலபாடல் ஒலிக்கத் தொடங்கியது.
இதைக் கேட்டவுடன் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா, பிட்ச் அருகிலேயே உற்சாகமாக நடனமாடினார். காயம் காரணமாக இத்தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், பிட்னஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று களமிறங்கிய ரோஹித் சர்மாவின் இந்த கலகலப்பான நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma in full masti mode! 😄🕺
As soon as the DJ played Chikni Chameli, Rohit Sharma couldn’t stop himself and started showing off some dance moves. 💃🔥 pic.twitter.com/afbXdLa9cI
— Faruk (@uf2151593) June 17, 2026
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தாலும், அதன் பின் இணைந்த ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணியை மீட்டெடுத்தது.
சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 48 ரன்கள் எடுத்திருந்த போது ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானின் பந்துவீச்சில் துரதிர்ஷ்டவசமாக போல்டாகி வெளியேறினார். இப்போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்தி வரும் வேளையில், இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
