அமைச்சர் வன்னியரசு அவர்கள் திடீரென அம்மா உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழங்கப்பட்ட உணவை அவரே நேரடியாகச் சாப்பிட்டுப் பார்த்து தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, உணவில் சேர்க்கப்பட்டிருந்த காய்கறிகளில் ஏதோ ஒரு மருந்து வாடை அடிப்பதை அவர் கவனித்தார். உடனே அங்கிருந்த ஊழியர்களை அழைத்த அமைச்சர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவில் இத்தகைய குறைபாடுகள் இருக்கக் கூடாது என்றும், இனிவரும் காலங்களில் சமைப்பதற்கு முன்பாக காய்கறிகளை நன்றாக, சுத்தமாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும் என்றும் பக்குவமாக அறிவுறுத்தினார்.
இந்தத் துறைக்கு வன்னியரச நியமிச்சது மிகவும் சரியான ஒன்று ,
வேலை செய்றவங்ககிட்ட இவ்வளவு பக்குவமா, இயல்பா என்ன அமைச்சரும் பேசமாட்டாங்க , மரியாதையும் கொடுக்க மாட்டாங்க…..
வெறும் கேமரா முன்னாடி சாப்பிட்ட மாதிரி Oru Scene எடுத்துட்டு கெளம்பிடுவாங்க, pic.twitter.com/B4qCjmC82Q
— 🅰NU 🅱rizzLina (@Its__Anu) June 13, 2026
அதோடு நின்றுவிடாமல், அந்த உணவகத்தில் வழங்கப்படும் சாம்பார் மிகவும் தண்ணீராக இருப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படும் புகாரையும் ஊழியர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். “சாம்பார் கொஞ்சம் கெட்டியாக, தரமாக இருந்தால் ஏழை எளிய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும், அதனால் கொஞ்சம் பார்த்துப் பக்குவமாகப் பண்ணுங்கள்” என்று எவ்வித கோபமும் காட்டாமல், மிகவும் தன்மையாகவும் பொறுமையாகவும் எடுத்துரைத்தார். இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி, அமைச்சரின் இந்த கனிவான மற்றும் பொறுப்பான அணுகுமுறைக்கு நெட்டிசன்கள் மத்தியில் பலத்த பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
