நாகப்பூரில் விளையாடிக்கொண்டே நிலக்கடலை சாப்பிட்ட சிறுவன் ஒருவனின் நுரையீரலில் அந்த கடலை சிக்கிய விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுதளவு தவறியிருந்தாலும் சிறுவனின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், மருத்துவர்கள் உடனடியாகச் செயல்பட்டு அவசர அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலில் இருந்த கடலையை பத்திரமாக வெளியே எடுத்தனர்.

மேலும் சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையால் சிறுவன் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தான். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் தங்களின் குழந்தைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

இதனால் குழந்தைகள் விளையாடும் போதோ அல்லது சிரிக்கும் போதோ உணவுப் பொருட்கள் மூச்சுக்குழாய்க்குள் செல்ல அதிக வாய்ப்புள்ளதால், இதுபோன்ற ஆபத்துகள் நேரிடுவதாக நாகப்பூர் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இக்கட்டான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவக் குழுவினர், குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறிப்பாக, குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடும் போதோ அல்லது பேசிக்கொண்டே இருக்கும் போதோ அவர்களுக்கு உண்பதற்கு எதையும் கொடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.