“அமைச்சர்கள் லிஸ்ட்டை முதல்வர் கரெக்டா சொல்லிட்டா சேகர்பாபு 10 லட்சம் ரூபாய் பரிசு தருவார்!” என்று பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் திமுக நட்சத்திரப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மிகக் கடுமையான பாணியில் நக்கல் செய்து பேசியிருப்பது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரில் நேற்று நடைபெற்ற திமுகவின்  பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய லியோனி, தவெக தலைமையிலான புதிய அரசை அக்குவேறாக விமர்சித்தார். “தமிழ்நாட்டில் தங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்குத் தங்களது சொந்த எம்.எல்.ஏ யார் என்றே தெரியவில்லை; அதைவிடக் கொடுமை என்னவென்றால், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கே தன் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் யார் யார் என்பதே தெரியாது” என்று மேடையில் லியோனி ஆக்ரோஷமாகப் பேசினார்.

மேலும், தனது அமைச்சர்கள் பட்டியலை முதலமைச்சர் விஜய் மட்டும் தப்பில்லாமல் வரிசையாகக் கூறிவிட்டால், அவருக்கு எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சொந்தப் காசில் இருந்து ரூ.10 லட்சம் பம்பர் பரிசு வழங்குவார் என லியோனி சவால் விடும் வகையில் பேசியிருந்தார்.