ஜூன் 3-ம் தேதி கர்நாடகாவின் 25-வது முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் சேர்த்து 13 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால், இந்த புதிய அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.
இதற்கு அதிரடியாக விளக்கமளித்துள்ள முதலமைச்சர் டி.கே.சிவகுமார், அமைச்சரவையில் இன்னும் பல காலியிடங்கள் இருப்பதாகவும், அடுத்தகட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பெண்களுக்குப் பக்காவாக பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கர்நாடகாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 18-ம் தேதி (வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை) நடைபெறவுள்ளதால், இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே கர்நாடக அமைச்சரவை அதிரடியாக விரிவாக்கம் செய்யப்படும் என அரசியல் வட்டாரங்கள் மிக பலமாக எதிர்பார்க்கின்றன.
