தமிழக முதல்வர் விஜய்யின் தவெக தரப்பிடம் ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டுள்ளது உண்மைதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இண்டி கூட்டணியில் தவெக மற்றும் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து கட்சியின் தேசியத் தலைமைதான் இறுதி முடிவெடுக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் இதே கருத்தையே வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது செல்வப்பெருந்தகையும் அதனை உறுதிப்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அரசியல் ரீதியாக இந்த சந்திப்புகள் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ள வேளையில், ஒருவேளை காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று தவெக அவர்களுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கும் பட்சத்தில், அது தவெகவின் சொந்த நாடாளுமன்ற கனவுக்குப் பெரிய முட்டுக்கட்டையாக அமையும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வாறு சீட் கைமாறினால் தவெகவின் பார்லிமென்ட் கனவு இன்னும் 31 வருடங்களுக்குத் தள்ளிப்போகும் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் டெல்லி தலைமையின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும், அதற்கு முதல்வர் விஜய் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
