தமிழ்நாட்டில் ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே நாளுக்கு நாள் அரசியல் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டி வரும் சூழலில், “இந்த தவெக ஆட்சியே இன்னும் 6 மாதங்கள் இருக்குமா என்ற பெரிய கேள்வியே இப்போ சந்தேகம் எழுப்பிக் கொண்டிருக்கிறது” என்று திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் காட்டமாக கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளை அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்துள்ளார்.
“திமுக என்பது எத்தனையோ சவால்களைச் சந்தித்த ஒரு பாரம்பரியமிக்க அரசியல் கட்சி; நாட்டில் எந்தவொரு குற்றம் எப்போது நடந்தாலும் அதனை தட்டிக்கேட்டு, சுட்டிக்காட்ட வேண்டியது ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியின் கடமை, அந்தக் கடமையைத்தான் எங்களது தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சரியாகச் செய்து வருகிறார்” என்று கறாராகக் கூறியுள்ளார்.
மேலும், “இப்போதே கேள்விகளைக் கேட்கக் கூடாது, 6 மாதங்கள் கழித்துத்தான் கேட்க வேண்டும் என்று தவெக தரப்பினர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது; இன்னும் 6 மாதம் கழித்து இந்த ஆட்சியே இருக்குமா என்ற சூழ்நிலையில், நாங்கள் யாரிடம் போய் கேள்வி கேட்பது?” என்று முதல்வர் விஜய்யின் அரசை ஓப்பனாகக் கிழித்தெறிந்துள்ளார்.
தவெக-வின் 6 மாத கால அவகாசப் பேச்சுக்கு எதிராக திமுக தரப்பிலிருந்து கிளம்பியுள்ள இந்த அதிரடித் தாக்குதல், இப்போ தமிழக அரசியல் களத்தில் அடுத்த கட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
