தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 1,020 கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் நிதி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அமலாக்கத்துறை (ED) தற்பொழுது அதிரடியாகச் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக கே.என்.நேரு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அந்தச் சம்மனில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசியல் களம் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு 1,000 கோடிக்கும் மேலான ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
